நாங்கள் பந்து வீச்சில் சிறப்பாக துவங்கவில்லை - இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி குறித்து ஷகிப் கருத்து


நாங்கள் பந்து வீச்சில் சிறப்பாக துவங்கவில்லை - இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி குறித்து ஷகிப் கருத்து
x

Image Courtesy: AFP

இங்கிலாந்துக்கு எதிராக இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் அணி தோல்வி அடைந்தது.

தர்மசாலா,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்தது. இதையடுத்து 365 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 227 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் இங்கிலாந்து அணி 137 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி குறித்து வங்காளதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் கூறியதாவது,

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்றது சிறப்பான ஒன்றுதான். ஆனால் நேற்று இரவு இந்த மைதானத்தில் மழை பெய்ததால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவி இருக்கும் என்று நினைத்தே நான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தேன். ஆனால் நாங்கள் பந்து வீச்சில் சிறப்பாக துவங்கவில்லை.

இங்கிலாந்து போன்ற வலுவான அணிக்கு எதிராக சற்று சறுக்கலை சந்தித்தாலும் அவர்கள் நமக்கு எதிராக ஆதிக்கத்தை செலுத்தி விடுவார்கள். இந்த மைதானத்தில் கடைசி 10 ஓவர்கள் நாங்கள் சிறப்பாக பந்துவீசி இருந்தாலும் 350 ரன்கள் சேசிங் செய்வது என்பது எப்போதுமே கடினமான ஒன்றுதான் இருந்தாலும் அதற்கு ஏற்ற திட்டங்களை நாங்கள் வைத்திருந்தோம். ஆனால் எங்களால் அதை சரியாக செயல்படுத்த முடியவில்லை.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஒருகட்டத்தில் 380 முதல் 390 ரன்கள் வரை குவிக்கும் என்று நினைத்திருந்த வேளையில் இறுதி கட்டத்தில் நாங்கள் அதை கட்டுப்படுத்தினோம். அடுத்து சென்னையில் நடைபெற இருக்கும் நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டி எங்களுக்கு முக்கியமான ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story