மகளிர் ஆஷஸ் டி20; ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்ற இங்கிலாந்து...!
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையேயான மகளிர் ஆஷஸ் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.
லண்டன்,
ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.ஆண்கள் அணியைப் போலவே பெண்கள் அணிகளுக்கு இடையேயும் ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இவ்விரு அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்டஆஷஸ் டி20 தொடர் நடைபெற்றது.இதில் முதல் 2 ஆட்டங்களில் முறையே ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் வெற்றி பெற்றன.இதனால் தொடர் 1-1 என்று சமநிலையில் இருந்தது.
இந்நிலையில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதனத்தில் நேற்று நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன்படி முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 34 ரன்கள் எடுத்தார்.இங்கிலாந்து அணி தரப்பில் நாட் ஸ்கிவர்பிரண்ட் 2 விக்கெட்டுகள் விழ்த்தினார்.
இரண்டாவது இன்னிங்ஸின் போது மழை குறுக்கீட்டது.இதனால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இங்கிலாந்து அணிக்கு இலக்கு 14 ஓவர்களில் 119 ரன்கள் எடுக்க வேண்டும் என்று மாற்றியமைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 13.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.இங்கிலாந்து அணி வீராங்கனை ஆலிஸ் கேப்ஸி அதிரடியாக விளையாடி அணி வெற்றி பெற உதவினார்.அவர் 23 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்தார்.இதன் மூலம் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டி20 தொடரை 2-1 என்ற கோல் கணக்கில் கைப்பற்றியது.
அடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.