மகளிர் கிரிக்கெட்; 2வது டி20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்..!


மகளிர் கிரிக்கெட்; 2வது டி20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்..!
x

Image Courtesy: @ICC 

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

டுனெடின்,

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. முதலாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் முனீபா அலி 35 ரன், அலியா ரியாஸ் 32 ரன் எடுத்தனர்.

இதையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணி பாகிஸ்தானின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 127 ரன்களே எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என பாகிஸ்தான் கைப்பற்றியது. இவ்விரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் 9ம் தேதி நடைபெற உள்ளது.


Next Story