பெண்கள் பிரீமியர் லீக்; வெற்றிப்பாதைக்கு திரும்புமா பெங்களூரு..? - உ.பி.வாரியர்ஸ் அணியுடன் இன்று மோதல்


பெண்கள் பிரீமியர் லீக்; வெற்றிப்பாதைக்கு திரும்புமா பெங்களூரு..? - உ.பி.வாரியர்ஸ் அணியுடன் இன்று மோதல்
x

Image Courtesy: @RCBTweets

5 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது.

பெங்களூரு,

5 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோத உள்ளன.

இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் பெங்களூரு அணி (2 வெற்றி, 2 தோல்வி) கண்டு 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. தனது கடைசி 2 லீக் ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ள பெங்களூரு அணி இன்றைய ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெறிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் உள்ளது.

அதேவேளையில் 4 லீக் ஆட்டங்களில் ஆடியுள்ள உ.பி.வாரியர்ஸ் (2 வெற்றி, 2 தோல்வி) 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. தனது கடைசி 2 லீக் ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ள வாரியர்ஸ் அணி வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் முனைப்பில் உள்ளது. இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.


Next Story