19 வயதுக்கு உட்பட்ட மகளிர் டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா...!


19 வயதுக்கு உட்பட்ட மகளிர் டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா...!
x

Image Courtesy: Twitter 

19 வயதுக்கு உட்பட்ட மகளிர் டி20 உலகக்கோப்பையின் அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியது.

கேப்டவுன்,

19 வயதுக்கு உட்பட்ட முதலாவது மகளிர் டி20 உலகக்கோப்பை தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஷபாலி வர்மா தலையிலான இந்திய அணி கலந்து கொண்டு ஆடி வருகிறது.

அந்த தொடரில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, வங்காளதேசம், இலங்கை, அமெரிக்கா அணிகளும், குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், ஜிம்பாப்வே, ருவாண்டா அணிகளும், குரூப் சி பிரிவில் அயர்லாந்து, இந்தோனேசியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளும், குரூப் டி பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, யுஏஇ, ஸ்காட்லாந்து உள்ளிட்ட அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இதில் இருந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, யுஏஇ, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், ருவாண்டா, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின. இந்த சூப்பர் 6 சுற்றின் லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைந்தன.

இதில் இரு குரூப்பிலும் முதல் இரு இடங்களை பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இந்திய அணி நியூசிலாந்தையும், ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தையும் அரையிறுதியில் சந்திக்கின்றன. அரையிறுதி ஆட்டங்கள் 27ம் தேதி நடைபெற உள்ளன.


Next Story