உலகக்கோப்பை கிரிக்கெட்; ஆஸ்திரேலியா - வங்காளதேசம் அணிகள் நாளை மோதல்...!


உலகக்கோப்பை கிரிக்கெட்; ஆஸ்திரேலியா - வங்காளதேசம் அணிகள் நாளை மோதல்...!
x

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

புனே,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.

இதையடுத்து மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இதில் அரையிறுதிக்கு முன்னேற நியூசிலாந்துக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் நாளை நடைபெறும் ஒரு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டது.

அதேவேளையில் நாளைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளிக்க வங்காளதேசம் கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.

வங்காளதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் காயம் காரணமாக விலகி உள்ளாதால் துணை கேப்டன் ஷாண்டோ நாளைய ஆட்டத்தில் கேப்டனாக செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story