உலகக்கோப்பை கிரிக்கெட்; ரீஸ் டாப்லிக்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்த இங்கிலாந்து...!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்த ரீஸ் டாப்லி உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார்.
புதுடெல்லி,
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி என கணக்கிடப்பட்ட நடப்பு சாம்பியன் இங்கிலாந்து 4 ஆட்டத்தில் ஆடி 1 வெற்றி, 3 தோல்வி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த 21ம் தேதி மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தின் போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி காயமடைந்தார். இதனால் அவர் தொடரில் இருந்து விலகுவதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் எஞ்சிய உலகக்கோப்பை தொடரில் காயமடைந்த ரீஸ் டாப்லிக்கு பதிலாக பிரைடன் கார்ஸ் அணியில் இணைக்கப்பட உள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Related Tags :
Next Story