உலகக்கோப்பை கிரிக்கெட்; வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் இங்கிலாந்து...இலங்கையுடன் நாளை மோதல்..!


உலகக்கோப்பை கிரிக்கெட்; வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் இங்கிலாந்து...இலங்கையுடன் நாளை மோதல்..!
x

Image Courtesy: AFP

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோத உள்ளன.

பெங்களூரு,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.

இந்நிலையில் இந்த தொடரில் நாளை நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன் இலங்கையை பெங்களூருவில் சந்திக்க உள்ளது. இரு அணிகளும் தலா 4 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 3 தோல்வி கண்டு 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8 மற்றும் 9வது இடத்தில் உள்ளன.

சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் உள்ளது. அதே வேளையில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளிக்க இலங்கை கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.


Next Story