உலகக்கோப்பை கிரிக்கெட்; நியூசிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு...!

Image Courtesy: AFP
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தர்மசாலா,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்தை சந்திக்கிறது.
இரு அணிகளும் தலா 4 ஆட்டங்களில் ஆடி அனைத்திலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ளன. இன்றைய ஆட்டத்தில் வெற்றிப்பயணத்தை தொடர இரு அணிகளும் கடுமையாக முயற்சிக்கும் அதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இந்திய அணியில் இரு மாற்றமாக காயம் அடைந்த பாண்ட்யா மற்றும் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக முகமது ஷமி, சூர்ய குமார் யாதவ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
Related Tags :
Next Story






