உலகக்கோப்பை கிரிக்கெட்; பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் காவி நிற ஜெர்சியா..? - விளக்கம் அளித்த பிசிசிஐ


உலகக்கோப்பை கிரிக்கெட்; பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் காவி நிற ஜெர்சியா..? - விளக்கம் அளித்த பிசிசிஐ
x

Image Courtesy: AFP

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வரும் 14-ம் தேதி அகமதாபாத்தில் பாகிஸ்தானை சந்திக்க உள்ளது.

புதுடெல்லி,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் நேற்று ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதையடுத்து இந்திய அணி தனது அடுத்தடுத்த லீக் ஆட்டங்களில் வரும் 11-ம் தேதி ஆப்கானிஸ்தானை டெல்லியிலும், 14-ம் தேதி பாகிஸ்தானை அகமதாபாத்திலும் சந்திக்க உள்ளது.

இந்நிலையில் வரும் 14-ம் தேதி அகமதபாத்தில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி காவி நிற ஜெர்சியில் களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த தகவலுக்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த தகவல் குறித்து பிசிசிஐ கவுரவ பொருளாளர் ஆஷிஷ் ஷெலர் கூறும்போது, இது முற்றிலும் ஆதாரமற்ற மற்றும் ஒருவரின் கற்பனையில் உருவான தகவல் என தெரிவித்துள்ளார்.


Next Story