உலகக்கோப்பை இறுதி போட்டி; இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் தேர்வு!


உலகக்கோப்பை இறுதி போட்டி; இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் தேர்வு!
x

image courtesy; twitter/ @ICC

இரு அணிகளிலும் மாற்றமின்றி அரையிறுதியில் விளையாடிய வீரர்களே இடம் பெற்றுள்ளனர்.

அகமதாபாத்,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடர் இந்தியாவின் 10 நகரங்களில் நடந்தது. லீக் மற்றும் அரையிறுதி சுற்று முடிவில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

கிரிக்கெட் உலகமே ஆவலோடு எதிர்நோக்கும் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

இந்த நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இரு அணிகளிலும் மாற்றமின்றி அரையிறுதியில் விளையாடிய வீரர்களே இடம் பெற்றுள்ளனர்.

இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு;-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

ஆஸ்திரேலியா; ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன், மேக்ஸ்வெல், ஜோஷ் இங்லிஸ், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட்.


Next Story