ஐஎஸ்எல் கால்பந்து தொடர் : பெங்களூரு - ஒடிசா அணிகள் இன்று பலப்பரீட்சை


ஐஎஸ்எல் கால்பந்து தொடர் : பெங்களூரு - ஒடிசா அணிகள் இன்று பலப்பரீட்சை
x
தினத்தந்தி 24 Nov 2021 9:57 AM GMT (Updated: 2021-11-24T15:27:43+05:30)

பெங்களூரு அணி தனது முதல் போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தியது

கோவா,

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது . கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் கேரளா அணியை 2-4 என்ற கணக்கில் கொல்கத்தா அணி வீழ்த்தியது.

நேற்று நடந்த போட்டியில் சென்னை அணி தனது முதல் போட்டியில் ஐதராபாத் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த நிலையில் இன்று நடைபெறும் 6 வது லீக் போட்டியில்  பெங்களூரு - ஒடிசா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .

ஒடிசா அணி தனது முதல் போட்டியில் இன்று களமிறங்க உள்ள நிலையில் பெங்களூரு அணி தனது முதல் போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Next Story