ஐ.எஸ்.எல் கால்பந்து; சென்னை- ஒடிசா அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல் கால்பந்து; சென்னை- ஒடிசா அணிகள் இன்று மோதல்
x

Image Courtesy: @ChennaiyinFC

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

சென்னை,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி., ஒடிசா எப்.சி.அணியை சந்திக்கிறது.

நடப்பு தொடரில் ஏற்கனவே ஒடிசாவிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோற்று இருந்த சென்னை அணி பதிலடி கொடுக்க தீவிரம் காட்டும். அதே நேரத்தில் ஒடிசா அணி தனது ஆதிக்கத்தை தொடர முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

சென்னை அணி இதுவரை 16 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 3 டிரா, 9 தோல்வி என 15 புள்ளிகளுடன் 11-வது இடத்திலும், ஒடிசா 17 ஆட்டங்களில் ஆடி 10 வெற்றி, 5 டிரா, 2 தோல்வி என 35 புள்ளிகளுடன் முதலிடத்திலும் இருக்கிறது.


Next Story