ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; பெங்களூரு அணியை வீழ்த்தி மும்பை வெற்றி


ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; பெங்களூரு அணியை வீழ்த்தி மும்பை வெற்றி
x

Image Courtesy: @IndSuperLeague

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

மும்பை,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை சிட்டி - பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின.

இதில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை அணி 2-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story