ஐஎஸ்எல் கால்பந்து ; நார்த் ஈஸ்ட் யுனைடெட் - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா!


ஐஎஸ்எல் கால்பந்து ; நார்த் ஈஸ்ட் யுனைடெட் - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா!
x

image courtesy; twitter/ @IndSuperLeague

இந்த தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் கோவா மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகள் மோத உள்ளன.

கவுகாத்தி,

12 அணிகள் கலந்து கொண்டுள்ள 10வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சில லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் சர்வதேச கால்பந்து போட்டிகளை கருத்தில் கொண்டு கடந்த 8ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை இடைவெளி விடப்பட்டது.

இந்நிலையில் இடைவெளி முடிவடைந்து மீண்டும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் - பெங்களூரு அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடித்த நிலையில் பிற்பாதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. பெங்களூரு அணி தரப்பில் சுனில் சேத்ரியும், நார்த் ஈஸ்ட் யுனைடெட் தரப்பில் அலெக்சாண்டர் ஜோவனோவிக்கும் தலா ஒரு கோல் அடித்தனர்.

இந்த தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் கோவா மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகள் மோத உள்ளன.


Next Story