ஐ.எஸ்.எல்.கால்பந்து ; சென்னை - பெங்களூரு அணிகள் நாளை மோதல்


ஐ.எஸ்.எல்.கால்பந்து ; சென்னை -  பெங்களூரு  அணிகள் நாளை மோதல்
x

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

பெங்களூரு,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் பெங்களூருவில் நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் சென்னை அணி 12 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 6 தோல்வி, 3 டிரா கண்டு புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் 12 ஆட்டங்கள் ஆடியுள்ள பெங்களூரு அணி 2 வெற்றி, 5 டிரா, 6 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது.


Next Story