பெண்கள் தெற்காசிய கால்பந்து: இந்தியா-வங்காளதேசம் ஆட்டம் 'டிரா'


பெண்கள் தெற்காசிய கால்பந்து: இந்தியா-வங்காளதேசம் ஆட்டம் டிரா
x

Image Courtesy : @IndianFootball twitter

இந்தியா-வங்காளதேசம் இடையிலான ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது.

டாக்கா,

இந்தியா, வங்காளதேசம், பூடான், நேபாளம் ஆகிய 4 நாடுகள் பங்கேற்றுள்ள 20 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் தெற்காசிய கால்பந்து போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. தனது தொடக்க ஆட்டத்தில் பூடானை 12-0 என்ற கோல் கணக்கில் பந்தாடிய இந்தியா நேற்று உள்ளூர் அணியான வங்காளதேசத்தை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது. இந்திய வீராங்கனைகள் கிடைத்த சில வாய்ப்புகளை தவற விட்டாலும், நன்றாகவே ஆடினர் என்று அணியின் தலைமை பயிற்சியாளர் மேமோல் ராக்கி தெரிவித்தார். இந்திய அணி அடுத்து நேபாளத்தை நாளை சந்திக்கிறது.


Next Story