உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று: இந்தியா-குவைத் அணிகள் இன்று பலப்பரீட்சை


உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று: இந்தியா-குவைத் அணிகள் இன்று பலப்பரீட்சை
x

image courtesy; AFP

ஆண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2026ஆம் ஆண்டில் நடைபெற உள்ளது.

குவைத் சிட்டி,

ஆண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2026ஆம் ஆண்டில் நடைபெற உள்ளது. அதற்கான ஆசிய மண்டல தகுதி சுற்றின் 2-வது சுற்றில் 36 அணிகள் பங்கேற்று உள்ளன. அவை 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா 2 முறை லீக்கில் மோதுகின்றன. இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 3-வது சுற்றுக்கு முன்னேறும். 2-வது சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடைபெறுகின்றன.

இதில் இந்தியா 'ஏ' பிரிவில் கத்தார், குவைத் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குவைத் சிட்டியில் இன்று நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி குவைத் உடன் மோத உள்ளது.

முன்னதாக 2026ஆம் ஆண்டில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு நிச்சயம் தகுதி பெறுவோம் என்று இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story