13-வது தேசிய சீனியர் ஆக்கி: இரண்டாம் நாள் முடிவுகள்...


13-வது தேசிய சீனியர் ஆக்கி: இரண்டாம் நாள் முடிவுகள்...
x

image courtesy; twitter/ @TheHockeyIndia

2-வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஜார்கண்ட் அணி 10-3 என்ற கோல் கணக்கில் ஆந்திராவை தோற்கடித்தது.

சென்னை,

தமிழ்நாடு ஆக்கி அமைப்பு சார்பில் 13-வது தேசிய சீனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 28 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

2-வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஜார்கண்ட் அணி 10-3 என்ற கோல் கணக்கில் ஆந்திராவை தோற்கடித்தது. மற்ற ஆட்டங்களில் முறையே சண்டிகார் 4-2 என்ற கோல் கணக்கில் கோவாவையும் , உத்தரபிரதேசம் 13-1 என்ற கோல் கணக்கில் கேரளாவையும் , இமாச்சலபிரதேசம் 4-0 என்ற கோல் கணக்கில் அசாமையும் மற்றும் புதுச்சேரி 4-3 என்ற கோல் கணக்கில் ராஜஸ்தானையும் வீழ்த்தி வெற்றி பெற்றன.


Next Story