ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்திய பெண்கள் அணி அறிவிப்பு


ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்திய பெண்கள் அணி அறிவிப்பு
x

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டிக்கான இந்திய பெண்கள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

7-வது பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி வருகிற 27-ந்தேதி முதல் நவம்பர் 5-ந்தேதி வரை ராஞ்சியில் நடக்கிறது. இதில் இந்தியா, தாய்லாந்து, மலேசியா, சீனா, நடப்பு சாம்பியன் ஜப்பான், தென்கொரியா ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.

இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் 27-ந்தேதி தாய்லாந்தை சந்திக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கோல் கீப்பர் சவிதா கேப்டனாக நீடிக்கிறார். இதில் ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற அணியில் அங்கம் வகித்த அனுபவ வீராங்கனை சுஷிலா சானு நீக்கப்பட்டுள்ளார். காயத்தால் அவதிப்படும் அவருக்கு பதிலாக பல்ஜீத் கவுர் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இந்திய அணி வருமாறு:-

கோல் கீப்பர்கள்: சவிதா (கேப்டன்), பிச்சுதேவி கரிபாம், பின்களம்: நிக்கி பிரதான், உதிதா, இஷிகா சவுத்ரி, தீப் கிரேஸ் எக்கா (துணை கேப்டன்), நடுகளம்: நிஷா, சலிமா டெடி, நேகா நவ்னீத் கவுர், சோனிகா, மோனிகா, ஜோதி, பல்ஜீத் கவுர், முன்களம்: லால்ரெம்சியாமி, சங்கிதா குமாரி, தீபிகா, வந்தனா கட்டாரியா.


Next Story