ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஆக்கி; இந்திய அணி அறிவிப்பு!


ஜூனியர் ஆண்கள்  உலகக்கோப்பை ஆக்கி; இந்திய அணி அறிவிப்பு!
x

image courtesy; twitter/@TheHockeyIndia

ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஆக்கித்தொடர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற உள்ளது.

புது டெல்லி,

13-வது ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஆக்கித்தொடர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற உள்ளது. இந்த தொடர் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி முடிவடைய உள்ளது.

இதில் பங்கேற்றுள்ள அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய அணி 'சி' பிரிவில் கனடா, கொரியா மற்றும் ஸ்பெயின் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் டிசம்பர் 5ஆம் தேதி கொரியா உடன் மோத உள்ளது.

இந்நிலையில் இந்திய ஆக்கி கூட்டமைப்பு ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை தொடருக்கான அணியை அறிவித்துள்ளது. இந்திய அணிக்கு உத்தம் சிங் கேப்டனாகவும், அரைஜீத் சிங் ஹண்டல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி விவரம் பின்வருமாறு;-

உத்தம் சிங் (கேப்டன்), அரைஜீத் சிங் ஹண்டல் (துணை கேப்டன்), மொகித், ரன்விஜய் சிங் யாதவ், ஷர்தானந்த் திவாரி, அமந்தீப் லக்ரா, ரோகித், சுனில் ஜோஜோ, அமிர் அலி, விஷ்னுகாந்த் சிங், பூவன்னா சி பி, ரஜிந்தர் சிங், அமந்தீப், ஆதித்யா சிங், சவுரப் ஆனந்த் குஷ்வாகா, சுதீப் சிர்மாகோ மற்றும் பாபி சிங் தாமி.


Next Story