பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி: இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற இந்திய அணி..!!

Image Courtacy: TheHockeyIndiaTwitter
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி அசத்தியது.
ராஞ்சி,
பெண்களுக்கான 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த அரையிறுதி போட்டியில் இந்திய அணி, தென்கொரியாவை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்திய அணியின் சார்பில் சலிமா மற்றும் வைஷ்ணவி வி.பால்கே ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்திய அணி இறுதிப்போட்டியில் ஜப்பான் அணியுடன் மோதுகிறது. தொடர்ந்து ஆறு போட்டிகளில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இருக்கும் இந்திய அணி, வலுவான உத்தியுடன் இறுதிப்போட்டியில் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story