ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஆக்கி: காலிறுதி சுற்றில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை!


ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஆக்கி: காலிறுதி சுற்றில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை!
x

image courtesy; twitter/ @TheHockeyIndia

தினத்தந்தி 11 Dec 2023 10:17 AM GMT (Updated: 11 Dec 2023 11:30 AM GMT)

லீக் சுற்று முடிவடைந்த நிலையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

கோலாலம்பூர்,

13-வது ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஆக்கி தொடர் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றிருந்தன. அவை 4 குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தன.

லீக் சுற்று முடிவடைந்த நிலையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அதன்படி இந்தியா, ஸ்பெயின், அர்ஜென்டினா, ஜெர்மனி, பிரான்ஸ், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இதில் நாளை நடைபெறும் ஒரு காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி நெதர்லாந்துடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. மற்ற காலிறுதி ஆட்டங்களில் அர்ஜென்டினா-ஜெர்மனி, பிரான்ஸ்-ஆஸ்திரேலியா மற்றும் ஸ்பெயின்-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.


Next Story