ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி 2023; தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்


ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி 2023; தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
x

image courtesy;twitter/@TheHockeyIndia

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடர் ஆகஸ்ட் மாதம் 3-தேதி சென்னையில் நடக்க இருக்கிறது.

சென்னை,

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஆக்கி 2023 சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி ஸ்டேடியத்தில் நடக்க இருக்கிறது. பாகிஸ்தான்,கொரியா,மலேசியா,ஜப்பான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளின் அணிகள் பங்கேற்க இருக்கின்றன. இந்த தொடருக்கான எற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் எற்பாடுகள் குறித்து தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மிகவும் எதிபார்க்கப்படும் ஆக்கி தொடர் என்பதால் கூடுதல் பொறுப்புடன் செயலாற்றுமாறு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இது குறித்து பேசிய ஆக்கி இந்திய பொதுச் செயலாளர் ஸ்ரீ போலோ நாத் சிங் கூறுகையில்

'தமிழக விளையாட்டுத்துறை ஆசிய ஆக்கி சாம்பியன்ஸ் தொடர் சிறப்பாக நடத்த மிகவும் பொறுப்புடன் செயல்படுகிறது.மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி ஸ்டேடியம் எப்ஐஎச் மற்றும் எஎப்எச் வழிகாட்டுதலின் படி உலகத்தரம் வாய்ந்த ஆக்கி மைதானங்கள் அளவிற்கு மேம்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஆசிய ஆக்கி சாம்பியன்ஸ் தொடர் சிறப்பாக நடத்த பல ஆலோசனைகள் வழங்கினார்.கூட்டம் புது உத்வேகத்தை எங்களுக்கு அளித்திருக்கிறது'' என்று கூறி உள்ளார்.

மேலும் அவர், சென்னையில் எராளமான ஆக்கி ரசிகர்கள் இருக்கிறார்கள் .எனவே ரசிகர்கள் பெருமளவிற்கு மைதானத்திற்கு வந்து போட்டிகளை ஆரவாரத்துடன் கண்டுகளிப்பார்கள் என்று கூறினார்.


Next Story