பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி - ராஞ்சியில் இன்று தொடக்கம்


பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி - ராஞ்சியில் இன்று தொடக்கம்
x

பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ராஞ்சியில் இன்று தொடங்குகிறது.

ராஞ்சி,

பெண்களுக்கான 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி நவம்பர் 5-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஜப்பான், 3 முறை சாம்பியனான தென்கொரியா, முன்னாள் சாம்பியனான இந்தியா மற்றும் சீனா, மலேசியா, தாய்லாந்து ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை ரவுண்ட் ராபின் லீக் அடிப்படையில் மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

தொடக்க நாளான இன்று 3 லீக் ஆட்டங்கள் நடக்கிறது. முதலாவது லீக் ஆட்டத்தில் ஜப்பான்-மலேசியா (மாலை 4 மணி), அடுத்த ஆட்டத்தில் சீனா-தென்கொரியா (மாலை 6:15 மணி) மோதுகின்றன. 3-வது லீக் ஆட்டத்தில் கோல் கீப்பர் சவிதா தலைமையிலான இந்திய அணி, தாய்லாந்தை (இரவு 8 மணி) சந்திக்கிறது. இந்தப் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story