தேசிய பள்ளி தடகளம்: 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை சாதனை


தேசிய பள்ளி தடகளம்: 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை சாதனை
x
தினத்தந்தி 11 Nov 2017 2:54 AM IST (Updated: 11 Nov 2017 2:53 AM IST)
t-max-icont-min-icon

63–வது தேசிய பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் நடந்து வருகிறது.

போபால்,

63–வது தேசிய பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் நடந்து வருகிறது. இதில் தடகள போட்டியில் நேற்று நடந்த 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவின் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை பி.எம்.தபிதா 14.38 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதற்கு முன்பு 2016–17–ம் ஆண்டில் கேரள வீராங்கனை அபர்ணா ராய் 14.41 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. தபிதா சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியாளர் பி.நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர் ஆவார்.

1 More update

Next Story