உலக ஜூனியர் ஸ்குவாஷ்: இறுதிப்போட்டியில் எகிப்து-இங்கிலாந்து


உலக ஜூனியர் ஸ்குவாஷ்: இறுதிப்போட்டியில் எகிப்து-இங்கிலாந்து
x
தினத்தந்தி 28 July 2018 8:20 PM GMT (Updated: 28 July 2018 8:21 PM GMT)

உலக ஜூனியர் ஸ்குவாஷ் இறுதிப்போட்டியில் எகிப்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.

சென்னை,

13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அணிகளுக்கான அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் எகிப்து அணி 3-0 என்ற கணக்கில் செக்குடியரசை துவம்சம் செய்து தொடர்ந்து 8-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. எகிப்து அணியில் களம் இறங்கிய மார்வன் டாரெக், மோஸ்தபா அசல், ஒமர் எல் டோர்கி ஆகிய மூன்று பேரும் நேர் செட்டில் வெற்றி பெற்று அசத்தினர். மற்றொரு அரைஇறுதியில் இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் அமெரிக்காவை தோற்கடித்து 16 ஆண்டுகளுக்கு பிறகு இறுதி சுற்றை எட்டியது. சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் எகிப்து-இங்கிலாந்து அணிகள் இன்று மல்லுகட்டுகின்றன.

Next Story