டேபிள் டென்னிஸ் பயிற்சியாளருக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து


டேபிள் டென்னிஸ் பயிற்சியாளருக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து
x
தினத்தந்தி 21 Sep 2018 9:15 PM GMT (Updated: 21 Sep 2018 8:11 PM GMT)

டேபிள் டென்னிஸ் பயிற்சியாளருக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


டேபிள் டென்னிஸ் வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி அளித்து வரும் தமிழகத்தை சேர்ந்த சீனிவாசராவுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா விருது வழங்க உள்ளது. இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மேன்மேலும் பல சிறந்த வீரர்களை உருவாக்கி சாதனை படைத்திட வேண்டும் என்று அவருக்கு அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சீனிவாசராவ், டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமலின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Next Story