துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 29 Dec 2018 10:00 PM GMT (Updated: 29 Dec 2018 7:03 PM GMT)

‘டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகிலேயே பேட்டிங் செய்வதற்கு கடினமான இடம் தென்ஆப்பிரிக்கா தான்’ என்று அந்த நாட்டு வீரர் டீன் எல்கர் கூறியுள்ளார்.


* ரஞ்சி கிரிக்கெட் தொடரில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ள முன்னாள் சாம்பியன் மும்பை அணி, விதர்பாவுடன் (ஏ பிரிவு) நாக்பூரில் இன்று மோதுகிறது. கொல்கத்தாவில் இன்று தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் பெங்கால்-டெல்லி (பி பிரிவு) அணிகள் சந்திக்கின்றன.

* இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆன்ட்ரூ ஸ்டிராசின் மனைவி ரூத் (வயது 46) நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ரூத் நேற்று மரணம் அடைந்தார். மனைவியை அருகில் இருந்து கவனித்துக் கொள்வதற்காகத் தான் ஆன்ட்ரூ ஸ்டிராஸ், இங்கிலாந்து கிரிக்கெட்டின் இயக்குனர் பதவியை துறந்தது குறிப்பிடத்தக்கது.

* ‘டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகிலேயே பேட்டிங் செய்வதற்கு கடினமான இடம் தென்ஆப்பிரிக்கா தான்’ என்று அந்த நாட்டு வீரர் டீன் எல்கர் கூறியுள்ளார்.

* ஆசிய விளையாட்டு சாம்பியனான இந்திய இளம் துப்பாக்கி சுடுதல் வீரர் சவுரப் சவுத்ரி, தேசிய அணித் தேர்வுக்கான பயிற்சியில் பங்கேற்றார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் அவர் மொத்தம் 248.2 புள்ளிகள் குவித்து பிரமிக்க வைத்தார். இது உலக சாதனையை விட 4.6 புள்ளிகள் அதிகமாகும்.

* 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய பந்து வீச்சாளர்கள் சரியான முறையில் தயாராவதற்கு ஐ.பி.எல். தொடர் உதவிகரமாக இருக்கும் என்று இந்திய மூத்த வீரர் டோனி கூறியுள்ளார்.


Next Story