பிற விளையாட்டு

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து அரைஇறுதிக்கு முன்னேற்றம் + "||" + Indonesian Open Badminton: Indian player Sindhu progress to semi-final

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து அரைஇறுதிக்கு முன்னேற்றம்

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து அரைஇறுதிக்கு முன்னேற்றம்
இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீராங்கனை சிந்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.
ஜகர்தா,

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-14, 21-7 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுஹராவை எளிதில் வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 44 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இன்று நடைபெறும் அரைஇறுதியில் சிந்து, சீன வீராங்கனை சென் யு பெய்யை சந்திக்கிறார்.