இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு


இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
x
தினத்தந்தி 26 July 2019 11:28 PM GMT (Updated: 26 July 2019 11:28 PM GMT)

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.


* இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதிரடி சூரர் கிறிஸ் கெய்ல் அணியில் இடம் பிடித்துள்ளார். இது தான் அவரது கடைசி ஒருநாள் தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 18-21, 15-21 என்ற நேர்செட்டில் ஜப்பானின் அகானே யமாகுச்சியிடம் தோற்று வெளியேறினார். கடந்த வாரம், இந்தோனேஷியா ஓபன் இறுதிசுற்றில் யமாகுச்சியிடம் தோல்வி கண்டு இருந்த சிந்து அதற்கு தகுந்த பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-12, 21-15 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியாவின் டாமி சுஜியர்டோவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.

* சர்வதேச குத்துச்சண்டை போட்டி தாய்லாந்தில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் அரைஇறுதியில் முன்னாள் ஜூனியர் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் 4-1 என்ற கணக்கில் தாய்லாந்தின் ஜூடாமஸ் ஜிட்பொங்கை வீழ்த்தி இறுதி சுற்றை எட்டினார். ஆண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் தீபக் சிங் 5-0 என்ற கணக்கில் பூடான் வீரர் தாஷி வாங்டியை வீழ்த்தினார்.

Next Story