புரோ கபடி: புனேயை வீழ்த்தியது மும்பை


புரோ கபடி: புனேயை வீழ்த்தியது மும்பை
x
தினத்தந்தி 27 July 2019 11:53 PM GMT (Updated: 27 July 2019 11:53 PM GMT)

புரோ கபடி போட்டியில், மும்பை அணி புனேயை வீழ்த்தியது.

மும்பை,

7-வது புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் நேற்றிரவு நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை அணி (யு மும்பா) 33-23 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை சாய்த்து 2-வது வெற்றியை பெற்றது. மற்றொரு பரபரப்பான ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 27-25 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சை வீழ்த்தியது. இதே மைதானத்தில் இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் தபாங் டெல்லி-அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 7.30 மணி), மும்பை-பெங்களூரு புல்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story