உலக டேபிள் டென்னிஸ் நட்சத்திர கோப்பை: காலிறுதிக்கு முன்னேறினார் அர்ச்சனா காமத்.


உலக டேபிள் டென்னிஸ் நட்சத்திர கோப்பை: காலிறுதிக்கு முன்னேறினார் அர்ச்சனா காமத்.
x
தினத்தந்தி 24 Sep 2021 12:10 PM GMT (Updated: 24 Sep 2021 12:12 PM GMT)

பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் அர்ச்சனா,மியு நாகசாகியை 11-13, 6-11, 11-8, 12-10, 11-8 என்ற கணக்கில் வீழ்த்தினார்

கத்தார் 

உலக டேபிள் டென்னிஸ் நட்சத்திர கோப்பைக்கான போட்டி கத்தார்  நாட்டின் தோகாவில் நடைபெற்று வருகிறது . இதில் இந்தியாவின் அர்ச்சனா காமத் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் . 

காலிறுதி போட்டியில் அர்ச்சனா ஜப்பானின் மியு நாகசாகியை எதிர்கொண்டார்.பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் அர்ச்சனா,மியு நாகசாகியை 11-13, 6-11, 11-8, 12-10, 11-8 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

மற்றொரு இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 7-11, 4-11, 10-12 என்ற கணக்கில்  பிரேசிலின் புருனா தகாஹஷியிடம் வீழ்ந்தார். 

மற்ற வீரர்,வீராங்கனைகள் அனைவரும் வெளியேறியுள்ளதால் அர்ச்சனா காமத்  மட்டுமே இந்தியா சார்பில் உலக டேபிள் டென்னிஸ் நட்சத்திர கோப்பையில் நீடிக்கும் ஒரே வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story