உலக மகளிர் செஸ் சாம்பியன்ஷிப்: இறுதி போட்டிக்கு முன்னேறுமா இந்திய அணி ?


உலக மகளிர் செஸ் சாம்பியன்ஷிப்: இறுதி போட்டிக்கு முன்னேறுமா இந்திய அணி ?
x
தினத்தந்தி 1 Oct 2021 12:53 PM GMT (Updated: 1 Oct 2021 12:53 PM GMT)

மேரி ஆன் கோம்ஸ் தனது இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளார்.

ஸ்பெயின் 

உலக மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஸ்பெயின் நாட்டின் ஷிட்ஜ்ஸ் நகரில் செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கியது . இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இதில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் மேரி ஆன் கோம்ஸ்,ஆர். வைஷாலி,ஹாரிகா,தானியா சச்தேவ் அடங்கிய இந்திய அணி கஜகஸ்தான் அணியை எதிர்கொண்டது.

தொடக்கத்தில் சிறிது தடுமாறிய இந்திய வீராங்கனைகள் பின்னர் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றனர். மேரி ஆன் கோம்ஸ் தனது இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தார்.

இந்தியா அணி தனது அரையிறுதி ஆட்டத்தில் வலுவான ஜார்ஜியா அணியை இன்று எதிர்கொள்கிறது.

Next Story