இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதிக்கு முன்னேறினார் சிந்து


இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதிக்கு முன்னேறினார் சிந்து
x
தினத்தந்தி 26 Nov 2021 10:33 PM GMT (Updated: 26 Nov 2021 10:33 PM GMT)

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் அரைஇறுதிக்கு முன்னேறினார் சிந்து.

பாலி, 

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி பாலி நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டத்தில், ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 54-ம் நிலை வீராங்கனையான தென்கொரியாவின் சிம் யுஜினை சந்தித்தார். 

66 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் சிந்து 14-21, 21-19, 21-14 என்ற செட் கணக்கில் சிம் யுஜினை போராடி வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். அரைஇறுதியில் சிந்து, தாய்லாந்தின் ராட்சனோக் இன்டானோனை எதிர்கொள்கிறார்.

ஆண்கள் ஒற்றையர் கால்இறுதியில் இந்திய வீரர் சாய் பிரனீத் 12-21, 8-21 என்ற நேர்செட்டில் ஒலிம்பிக் சாம்பியனான விக்டர் ஆக்சல்செனிடம் (டென்மார்க்) தோல்வி கண்டு வெளியேறினார். 

ஆண்கள் இரட்டையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை 21-19, 21-19 என்ற நேர்செட்டில் மலேசியாவின் கோஹ் ஜி பெய்-நூர் இசுதின் ஜோடியை தோற்கடித்து அரைஇறுதியை எட்டியது.


Next Story