கனடா ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் ரஜாவத் அரைஇறுதியில் தோல்வி


கனடா ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் ரஜாவத் அரைஇறுதியில் தோல்வி
x

கனடா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் ரஜாவத் அரைஇறுதியில் தோல்வியடைந்தார்.

கல்கேரி,

கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள கல்கேரி நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் 39-ம் நிலை வீரரான இந்தியாவின் பிரியன்ஷூ ரஜாவத், பிரான்ஸ் வீரர் அலெக்ஸ் லேனியர் உடன் மோதினார்.

இந்த போட்டியில் பிரியன்ஷூ ரஜாவத் 17-21, 10-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். ரஜாவத்தை வீழ்த்திய அலெக்ஸ் லேனியர் இறுதிபோட்டிக்கு முன்னேறினார்.


Next Story