செங்கல்பட்டு மாவட்ட கைப்பந்து போட்டி: 13-ந்தேதி தொடங்குகிறது


செங்கல்பட்டு மாவட்ட கைப்பந்து போட்டி: 13-ந்தேதி தொடங்குகிறது
x

செங்கல்பட்டு மாவட்ட கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வரும் 13-ந்தேதி தொடங்குகிறது.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் செங்கல்பட்டு மாவட்ட கைப்பந்து செயலாளரிடம் நேரிலோ அல்லது cvbassn@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலோ பெயர்களை பதிவு செய்யலாம் என்று செங்கல்பட்டு மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் எம்.அழகேசன் தெரிவித்துள்ளார்.


Next Story