சென்னை 'ஏ' டிவிசன் கைப்பந்து: எஸ்.ஆர்.எம். வெற்றி


சென்னை ஏ டிவிசன் கைப்பந்து: எஸ்.ஆர்.எம். வெற்றி
x

‘ஏ’ டிவிசன் கைப்பந்து போட்டியில் எஸ்.ஆர்.எம். அணி வெற்றி பெற்றது.

சென்னை,

சென்னை மாவட்ட 'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இதில் 3-வது நாளான நேற்று நடந்த ஆட்டங்களில் இந்தியன் வங்கி 25-20, 25-23, 25-20 என்ற நேர் செட்டில் தமிழ்நாடு போலீசையும், எஸ்.ஆர்.எம். அணி 25-23, 23-25, 25-11, 25-21 என்ற செட் கணக்கில் சுங்க இலாகாவையும் வீழ்த்தியது.


Next Story