சென்னையில் வரும் 15-ந்தேதி முதல் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி


சென்னையில் வரும் 15-ந்தேதி முதல் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி
x
தினத்தந்தி 11 Dec 2023 6:55 PM IST (Updated: 11 Dec 2023 7:23 PM IST)
t-max-icont-min-icon

போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.50 லட்சத்தை தமிழக அரசு வழங்கவுள்ளது.

சென்னை,

சென்னையில் கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டி வருகிற 15ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த போட்டியில் 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் பங்கேற்க உள்ளனர். இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர்களான டி.குகேஷ், அர்ஜுன் எரிகைசி உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.50 லட்சத்தை தமிழக அரசு வழங்கவுள்ளது.


Next Story