பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி 'சாம்பியன்'


பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன்
x

கோப்புப்படம் 

750 தரவரிசை புள்ளிகள் கொண்ட பேட்மிண்டன் போட்டி ஒன்றில் இரட்டையர் பிரிவில் வாகை சூடிய முதல் இந்திய ஜோடி என்ற பெருமையை பெற்றனர்.

பாரீஸ்,

பிரெஞ்சு ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாரீசில் நடந்தது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிஆட்டத்தில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, 25-வது இடத்தில் உள்ள சீன தைபேயின் லூ சிங் யாவ்-யாங் போ ஹான் இணையை எதிர்கொண்டது.

48 நிமிடம் நடந்த விறுவிறுப்பான இந்த மோதலில் சாத்விக்-சிராக் ஷெட்டி கூட்டணி 21-13, 21-19 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. இதன் மூலம் 750 தரவரிசை புள்ளிகள் கொண்ட பேட்மிண்டன் போட்டி ஒன்றில் இரட்டையர் பிரிவில் வாகை சூடிய முதல் இந்திய ஜோடி என்ற பெருமையை பெற்றனர்.

சாதனை படைத்த சாத்விக் சாய்ராஜ் -சிராக் ஷெட்டி ஜோடி மற்றும் ஸ்பெயினில் நடந்த உலக ஜூனியர் பேட்மிண்டனில் (19 வயதுக்கு உட்பட்டோர்) வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் சங்கர் முத்துசாமி ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று இந்திய பேட்மிண்டன் சங்க தலைவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.

1 More update

Next Story