எகிப்தில் நடக்கும் உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து இந்தியா விலகல்
எகிப்தில் நடக்கும் உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து விலகுவதாக அகில இந்திய செஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
சென்னை,
உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி எகிப்தின் ஷார்ம் எல் ஷேக் நகரில் இன்று முதல் 23-ந்தேதி வரை நடக்க உள்ளது. இதில் இந்தியாவில் இருந்து 8, 10, 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் 39 வீரர்கள் கலந்து கொள்வதாக இருந்தது.
ஆனால் இந்த போட்டி நடக்கும் நகரம் இஸ்ரேல் எல்லையில் இருந்து 400 கிலோமீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நடந்து கொண்டிருப்பதால், பாதுகாப்பு கருதி இந்த போட்டியில் இருந்து இந்தியா விலகியது. இந்த தகவலை அகில இந்திய செஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story