ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்; சிந்து, லக்ஷயா சென் விலகல்


ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்; சிந்து, லக்ஷயா சென் விலகல்
x

Image Coutest: AFP

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி யோகோஹகா நகரில் வரும் 20ம் தேதி தொடங்குகிறது.

யோகோஹகா,

பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ள ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி யோகோஹகா நகரில் வரும் 20ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில், இந்த தொடரில் இருந்து இந்தியாவின் முன்னணி வீரர்களாக லக்ஷயா சென், எச்.எஸ்.பிரனாய் மற்றும் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் விலகி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணையும் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக் தொடர் நிறைவடைந்த பின் நடைபெறும் முதல் பேட்மிண்டன் தொடர் இதுவாகும். இந்த தொடரில் இருந்து இந்திய முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் விலகியதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

1 More update

Next Story