"இந்த வெற்றியை எனது நாட்டிற்கு சமர்ப்பிக்கிறேன்" - மனு பாக்கர்


இந்த வெற்றியை எனது நாட்டிற்கு சமர்ப்பிக்கிறேன் - மனு பாக்கர்
x

10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கர்.

பாரீஸ்,

பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் மனு பாக்கர் பங்கேற்றார். 8 பேர் கலந்து கொண்டதில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 221.7 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்தார். இதன்மூலம் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது. ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய மனு பாக்கர் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்தினார் பிரதமர் மோடி. ஒலிம்பிக்ஸ் துப்பாக்கிச் சுடுதலில் முதல்முறையாக பதக்கம் வெல்லும் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை பதிவு செய்துள்ளார் மனு.

இந்தநிலையில், பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய மனு பாக்கர்,

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியாமல் போனது மிகவும் வருத்தத்தை அளித்தது. நீண்ட நாட்களாக அந்த துயரில் இருந்து என்னால் மீளமுடியவில்லை. தற்போது எனது கனவு நனவாகிவிட்டது. எனக்கு மட்டுமல்ல என்னை ஆதரித்த அனைவரின் கனவும் நிறைவேறி உள்ளது. இந்த வெற்றியை எனது நாட்டிற்கு சமர்ப்பிக்கிறேன் என்றார்.


Next Story