செவி மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் பங்கேற்க தமிழக வீரர்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்


செவி மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் பங்கேற்க தமிழக வீரர்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
x

இதில் தடகளப் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜி.தமிழ்ச்செல்வன், சுதர்சன், வர்சினி, பிரியங்கா, சுபஸ்ரீ ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

சென்னை,

பிரேசிலின் சாவ்பாலோ நகரில் நாளை முதல் 22-ம் தேதி வரை செவி மாற்றுத்திறனாளிகளுக்கான முதலாவது உலக இளையோர் விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் தடகளப் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜி.தமிழ்ச்செல்வன், சுதர்சன், வர்சினி, பிரியங்கா, சுபஸ்ரீ ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இவர்களுக்கான விமானப்பயணம், தங்குமிடம், விசா உள்ளிட்ட செலவினங்களுக்காக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.25 லட்சத்திற்கான காசோலையை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

இந்த சர்வதேச போட்டியில் வெற்றி பெற்று தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித்தர அவர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தினார்.


Next Story