தேசிய வில்வித்தை போட்டி: தமிழக அணிக்கு வெள்ளிப்பதக்கம்


தேசிய வில்வித்தை போட்டி: தமிழக அணிக்கு வெள்ளிப்பதக்கம்
x

கோப்புப்படம்

42-வது தேசிய சீனியர் வில்வித்தை போட்டி குஜராத் மாநிலம் கெவாடியா நகரில் நடந்து வருகிறது.

சென்னை,

42-வது தேசிய சீனியர் வில்வித்தை போட்டி குஜராத் மாநிலம் கெவாடியா நகரில் நடந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 1,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் பெண்கள் அணிக்கான ரீகர்வ் போட்டியில் முதலில் நடந்த ரேங்கிங் பிரிவில் 16-வது இடத்தை பெற்ற தமிழ்நாடு அதன் பிறகு ராஜஸ்தான், மராட்டியத்தை வீழ்த்தி அரைஇறுதியை எட்டியது. காமனா ஜெயின், ஐஸ்வர்யா, சினேகவர்ஷினி, ஹனான் ஆகியோர் அடங்கிய தமிழக அணி அரைஇறுதியில் 6-0 என்ற கணக்கில் வலிமையான ஜார்கண்டுக்கு அதிர்ச்சி அளித்தது.

ஆனால் இறுதி ஆட்டத்தில் 0-6 என்ற கணக்கில் பெங்காலிடம் தோற்று தமிழக அணி வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. 'தேசிய ரீகர்வ் பிரிவில் தமிழக பெண்கள் அணி பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை' என்று அணியினருடன் சென்றுள்ள தமிழ்நாடு வில்வித்தை சங்க செயலாளர் ஷிஹான் ஹூசைனி தெரிவித்தார்.


Next Story