தேசிய விளையாட்டுப் போட்டி: தமிழக கூடைப்பந்து அணிக்கு தங்கப்பதக்கம்


தேசிய விளையாட்டுப் போட்டி: தமிழக கூடைப்பந்து அணிக்கு தங்கப்பதக்கம்
x

Image Courtesy : @Nat_Games_Guj twitter

தேசிய விளையாட்டில் தமிழக ஆண்கள் கூடைப்பந்து அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியது.

ஆமதாபாத்,

36-வது ஆசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் 6 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியின் (5 பேர் ஆட்டம்) இறுதி சுற்றில் தமிழ்நாடு 97-89 என்ற புள்ளி கணக்கில் பஞ்சாப்பை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.

தேசிய விளையாட்டு ஆண்கள் கூடைப்பந்தில் 2002-ம் ஆண்டுக்கு பிறகு தமிழக அணி முதல்முறையாக மகுடம் சூடியிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். அரவிந்த் குமார் 33 புள்ளி எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.

இதன் பெண்கள் பிரிவில் தெலுங்கானாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் தமிழகம் 62-67 என்ற புள்ளி கணக்கில் போராடி தோல்வியை தழுவியது. இதனால் தமிழகம் வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. தமிழக அணியில் அதிகபட்சமாக தர்ஷினி 18 புள்ளிகள் எடுத்தார்.


Next Story