தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் - சென்னையில் இன்று தொடங்குகிறது


தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் - சென்னையில் இன்று தொடங்குகிறது
x

மொத்தம் 26 மாநிலங்களைச் சேர்ந்த 417 வீரர், வீராங்கனைகள் தொடரில் பங்கேற்க உள்ளனர்.

சென்னை,

சென்னையில் இன்று 79-வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்குகிறது. இன்று தொடங்கி வரும் 23-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில், தேசிய அளவில் 26 மாநிலங்களைச் சேர்ந்த 417 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாட உள்ளனர்.

இதில் ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற அபய் சிங், தன்வி கண்ணா, அனாஹத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்த தொடரில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் 8 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் சென்னையில் 7-வது முறையாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story