ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை தான்யா ஹேமந்த் தோல்வி


ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை தான்யா ஹேமந்த் தோல்வி
x

இந்திய வீராங்கனை தான்யா ஹேமந்த் ஜப்பானின் நட்சுகி நிடைராவிடம் தோல்வி கண்டு நடையை கட்டினார்.

ஆர்லீன்ஸ்,

ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை தான்யா ஹேமந்த் 8-21, 17-21 என்ற நேர்செட்டில் ஜப்பானின் நட்சுகி நிடைராவிடம் தோல்வி கண்டு நடையை கட்டினார்.

அதே நேரம் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 58-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் பிரியான்ஷூ ரஜாவத் 21-8, 21-16 என்ற நேர்செட்டில் 12-ம் நிலை வீரரான ஜப்பானின் கென்டா நிஷிமோடோவுக்கு அதிர்ச்சி கால்இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் மிதுன் மஞ்சுநாத் 15-21, 19-21 என்ற நேர்செட்டில் சீனதைபேயின் சி யூ சென்னிடம் தோல்வி அடைந்தார்.


Next Story