பாரா ஒலிம்பிக்; மாரியப்பன் தங்கவேலுவுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து


பாரா ஒலிம்பிக்; மாரியப்பன் தங்கவேலுவுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
x

மாரியப்பன் தங்கவேலுவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

பாரிஸ் நகரில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் வென்றுள்ள தமிழ்நாட்டின் தங்கமகன் மாரியப்பன் தங்கவேலுவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தொடர்ந்து மூன்றாவது முறையாக பதக்கம் வென்றுள்ள தாங்கள், மேலும் பல சிகரங்களைத் தொட்டு நாட்டிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன். என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story