சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: இந்தியன் வங்கி அணி வெற்றி


சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: இந்தியன் வங்கி அணி வெற்றி
x
தினத்தந்தி 6 March 2024 11:17 PM GMT (Updated: 7 March 2024 2:47 AM GMT)

இந்தியன் வங்கி அணியில் சோமன்னா 7 கோலும், ஸ்டாலின் அபிலாஷ், ஹார்ட்லின் ஜேம்ஸ் தலா ஒரு கோலும் அடித்தனர்

சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் 59-வது சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் இந்தியன் வங்கி 9-2 என்ற கோல் கணக்கில் ஸ்டேட் வங்கியை எளிதில் தோற்கடித்தது.

இந்தியன் வங்கியில் சோமன்னா 7 கோலும், ஸ்டாலின் அபிலாஷ், ஹார்ட்லின் ஜேம்ஸ் தலா ஒரு கோலும், ஸ்டேட் வங்கியில் சூர்யா, சீனிவாசன் தலா ஒரு கோலும் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் 5-0 என்ற கோல் கணக்கில் சென்னை மாநகர போலீஸ் அணியை வீழ்த்தியது . தமிழ்நாடு போலீஸ் அணியில் சுரேந்தர், சண்முகவேல் தலா 2 கோலும், கலிவரதன் ஒரு கோலும் அடித்தனர்.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் ஐ.சி.எப். - தெற்கு ரெயில்வே (பிற்பகல் 2 மணி), எஸ்.டி.ஏ.டி. - இந்திய உணவு கழகம் (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story